ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் – மோடி மீது நடிகர் சித்தார்த் விமர்சனம்!

பாகிஸ்தான் மீது தாக்குதல் தேர்தல் பரப்புரையை திவீரமாக்கிய மோடி!

தேர்தலுக்கு முன்னர்  எழுவர் விடுதலை?

பாதுகாப்பு படையைத்தான் மக்கள் நம்புகிறார்கள். ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தாந் இந்தியா இரு நாட்டு எல்லையில் போர் பதட்டம் நிலவி வருகிறது. இதையொட்டி இரு நாடுகளும் எல்லை கடந்த தாக்குதலில் ஈடுபட இந்திய விமானி அபி நந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் அவரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்து இந்தியாவிடம் ஒப்படைத்த நிலையில், இந்த போரை பாஜகவும் மோடியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மோடி “எதிர்க்கட்சிகள் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். அவர்கள் என்னை கொலை செய்யப்பார்க்கிறார்கள். இயற்கையாகவே நம்முடைய ராணுவ படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பெருமை கொள்ள வேண்டும். ஆனால், சிலர் இந்திய படைகள் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளை சாடியிருந்தார் பிரதமர்.
இதனையடுத்து ட்விட்டர் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகர் சித்தார்த் “பாதுகாப்பு படைகளைத்தான் மக்கள் நம்புகிறார்கள். மக்கள் அவர்களுக்கு பக்க பலமாக நிற்கிறார்கள். உங்களையும் உங்கள் கூட்டத்தையும் அவர்கள் நம்பவில்லை. புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹிரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹிரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்பு படைகளுக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களையும் நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்” என நடிகர் சிதார்த் குறிப்பிட்டுள்ளார்.
#siddarth #modi #pulwama_attak #pak_air_strike

முகிலன் சமாதி என்று முகநூலில் தெரிவித்த திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர்!

மோடிக்கு வெட்கமாக இல்லையா? – ராகுல் காட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*