அமித்ஷா மிரட்டல் –முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அச்சம்!

ஜூலியன் அசாஞ்சேவை வலுக்காட்டாயமாக கைது செய்த லண்டன் போலீஸ்!

ட்டுவழிச்சாலை – வழக்குப் போட்ட விவசாயி அன்புமணி மீது பாய்ச்சல்!

இந்துக்கள் பௌத்தவர்களைத் தவிற  ஏனையோரை நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று பாஜக தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில்  தெரிவித்துள்ளது சிறுபான்மை மக்களிடம் பெரும் அச்சத்தை தோற்று வித்துள்ளது.மேற்குவங்க மாநிலம் ராய்கஞ்ச் பகுதியில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா “மேற்கு வங்கத்தில் தேசிய  குடிமக்கள் பதிவு அமல்படுத்தப்படும். சட்டவிரோதமான குடியேறிகள் கரையான்களைப் போனவர்கள். ஏழைகளுக்குச் செல்ல வேண்டிய உணவுகளை குடியேறிகள் எடுத்துக் கொள்கிறார்கள். நமக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி சிறுபான்மையினரை சமாதானம் செய்யும் அரசியலையே செய்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் 23 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிய பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் வீழ்ச்சி துவங்கும். நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவுச் சட்டத்தை அமல் படுத்துவோம்.  இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்களைத் தவிர நாட்டுக்குள் சட்ட விரோதமாக குடியேறிய அனைவரையும் நாங்கள் வெளியேற்றுவோம்.  இந்து, பௌத்த அகதிகளை கண்டுபிடித்து குடியுரிமை வழங்குவோம்.  ஆனால், மம்தா பானர்ஜி பள்ளத்தாக்குகளை நாசமாக்கி விட்டார். சட்டவிரோத  குடியேறிகளைத் தவிற இந்தியாவின் உண்மையான குடிமக்களுக்கு எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை” என்றார். அமித்ஷா.

அமித்ஷாவின் இந்த உரை இந்தியா முழுவதிலும் வாழும்  முஸ்லீம், கிறிஸ்தவ, பார்சி சிறுபான்மையினத்தவர்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

#அமித்ஷா #பாஜக  #மேற்குவங்கம்

பழகிக் கொள்வோம் வாருங்கள்! –அனிதா என். ரத்னம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*