இரண்டாவது அட்டாக் -மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே இறந்த ரித்திஷ்!

அமித்ஷா மிரட்டல் –முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அச்சம்!

ஜூலியன் அசாஞ்சேவை வலுக்காட்டாயமாக கைது செய்த லண்டன் போலீஸ்!

ட்டுவழிச்சாலை – வழக்குப் போட்ட விவசாயி அன்புமணி மீது பாய்ச்சல்!

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  ஜே.கே. ரித்திஷ் ராமநாதபுரம் வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 46.இந்திய வம்சாவளி குடும்பத்தில் இலங்கை கண்டியில் 1973-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி பிறந்த ஜே.கே ரித்திஷ் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர். அள்ளிக் கொடுக்கும் கொடை வள்ளல் என்று அனைவராலும் புகழப்பட்ட ரித்திஷ் திரையுலகில் நுழைந்து ஹிரோவாக நடித்தார். அவர் நடிப்பில் சின்னபுள்ள, கானல் நீர், நாயகன் போன்ற படங்கள் வெளியானது.

பின்னர் 2009-ஆம் ஆண்டு திமுக சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணி செய்தார்.  திரையுலகம், அரசியல் என பரபரப்பாக இயங்கி வந்தவர் 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் திரையுலகில் இருந்து விலகி இருந்தார். அதிமுக பிரமுகராக அடையாளம் காணப்பட்டாலும் சத்தமில்லாமல் வாழ்ந்து வந்தவர் இந்த தேர்தல் ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையிலான வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தும் வந்தார். ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு முதல் முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று மதியம் ராமநாதபுரத்தில் உள்ள தன் வீட்டில் மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுத்து வந்த நிலையில், அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. 46 வயதில் ரித்திஷின் மரணம் திரைத்துறை, அரசியல் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விசால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

#ரித்தீஷ்மரணம்  #ராமநாதபுரம்_நாடாளுமன்றதொகுதி #ராமநாதபுரம்

பழகிக் கொள்வோம் வாருங்கள்! –அனிதா என். ரத்னம்!

எட்டுவழிச்சாலை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதி?

மயங்கி விழுந்த மன்சூர் அலிகான் –மருத்துவமனையில் அனுமதி!

பொள்ளாச்சி பிரகதி -பாலியல் சித்ரவதை செய்து கொன்ற அத்தை மகன்!

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பாமக திட்டம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*