எட்டுவழிச்சாலை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதி?

மயங்கி விழுந்த மன்சூர் அலிகான் –மருத்துவமனையில் அனுமதி!

பொள்ளாச்சி பிரகதி -பாலியல் சித்ரவதை செய்து கொன்ற அத்தை மகன்!

எட்டுவழிச்சாலை  திட்டம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை முதல் சேலம் வரை பத்தாயிரம் கோடி ருபாய் செலவில் எட்டுவழிச்சாலை நிறைவேற்றப்படும் என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த சாலை அறிவிக்கப்பட்ட  நாள் முதல் அதிருப்தி நிலவி வந்தது. காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக புகார் கூறினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த விவசாயிகளின் கோரிக்கையை ஆதரித்தது. விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம்,  விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட  நில ஆர்ஜிதம் செல்லாது என  அறிவித்து,முறையான வழிகாட்டும்  நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும். மீண்டும் நிலம் எடுக்க உரிய வழிமுறைகளுடன் சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு செய்யலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம். குறிப்பாக எட்டுவழிச்சாலை திட்டம் கைவிடப்படவில்லை.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிடம் பேசிய முதல்வர்:-

“ எட்டுவழிச்சாலை அதிமுகவின் கனவுத்திட்டம். இத்திட்டத்தால் வேலை வாய்ப்பு பெருகும். எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவோம்” என்கிறார். ஆனால், இதன் பொருள் என்ன கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இப்போதைக்கு விட்டு விட்டு மீண்டும் அதே நிலங்களை புதிய வழிகாட்டும் நெறிமுறைகளின் படி கைப்பற்றுவோம் என்பதா என்ற குழப்பம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

#எட்டுவழிச்சாலை  #8way_road

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பாமக திட்டம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*