ஜூலியன் அசாஞ்சேவை வலுக்காட்டாயமாக கைது செய்த லண்டன் போலீஸ்!

எட்டுவழிச்சாலை – வழக்குப் போட்ட விவசாயி அன்புமணி மீது பாய்ச்சல்!

புகழ் பெற்ற விக்கிலீக்ஸ் ஊடகத்தின் அதிபரும் நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சேவை லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து லண்டன் போலீஸ் கைது செய்துள்ளது.ஸ்வீடன் நாட்டு பத்திரிகையாளரான ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையம் மூலம் அமெரிக்காவின் பல ரகசியங்களை வெளியிட்டு வந்தார். இதனால் அமெரிக்காவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இதனையொட்டி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்வீடனை விட்டு வெளியேறிய அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் கோரி அடைக்கலமானார். இதற்கிடையில் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டிலும் ஜாமீன் பெற்று சர்வதேச விதிமுறைகளின் படி அரசியல்  அகதி அந்தஸ்துடன் ஈக்வடார் தூதரகத்தில் இருந்தார். இந்நிலையில், சர்வதேசச் சட்டங்களை அவர் மீறி விட்டதாக கூறி லண்டன் போலீஸ் அவரை ஈக்வடார் தூதரகத்திற்குள் நுழைந்து லண்டன் போலீஸ் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. போலீசாருடன் செல்ல மறுத்த அசாஞ்சேவை வலுக்கட்டாயமாக போலீசார் தூக்கிச் சென்றுள்ளனர். அவரை நாடு கடத்தும் முடிவை லண்டன் நீதிமன்றம் எடுத்தால் அவர் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவார். ஆனால்,  அவர் ஸ்வீடன் செல்லும் பட்சத்தில் அமெரிக்காவால் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஜூலியன்  அசாஞ்சே தன்னை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

#ஜுலியன்_அசாஞ்சே #விக்கிலீக்ஸ் #ஜூலியன்

பழகிக் கொள்வோம் வாருங்கள்! –அனிதா என். ரத்னம்!

எட்டுவழிச்சாலை நிறைவேற்றுவதில் எடப்பாடி பழனிசாமி உறுதி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*