தமிழிசை வீட்டில் கோடி கோடியாய் பணம் –ஸ்டாலின் காட்டம்!

நாளை மறு நாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்த நிலையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்குமாக நாளை மறு நாள் தேர்தல் நடைபெறுகிறது.  வருமானவரித்துறை எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடத்திய ரெய்டில் துரைமுருகனை குறிவைத்தும் ரெய்ட் நடத்தப்பட்டது. துரைமுருகனின் நண்பரின் குடோனில் சுமார் 11 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் விளக்கமாக புகார் அனுப்பியது.

அந்த புகாரின் அடிப்படையில் பிரச்சாரம் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னால் வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஜனாதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் வேலூர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் சூழல் சீர்கெட்டு விட்டதாக கூறி தேர்தலை ரத்து செய்துள்ளது. இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள துரைமுருகன்  இதை “ஜனநாயக படுகொலை” என்று கண்டித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினோ “தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் வைத்துள்ளார்கள் அங்கே ஏன் ரெய்ட் நடத்தவில்லை. திமுக மீது களங்கம் கற்பிக்க மோடி  தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார்” என்று ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

#ஸ்டாலின் #தமிழிசை #வேலூர்_நாடாளுமன்றதொகுதி #துரைமுருகன்

ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம் அதிர்ச்சி!

அமித்ஷா மிரட்டல் –முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அச்சம்!

ஜூலியன் அசாஞ்சேவை வலுக்காட்டாயமாக கைது செய்த லண்டன் போலீஸ்!

ட்டுவழிச்சாலை – வழக்குப் போட்ட விவசாயி அன்புமணி மீது பாய்ச்சல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*