தவறு செய்யும் தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?

தமிழிசை வீட்டில் கோடி கோடியாய் பணம் –ஸ்டாலின் காட்டம்!

திமுக கூட்டணிக்கு ஆதரவு -அரியலூர் அனிதாவின் அண்ணன் அறிவிப்பு!

குற்றமிழைக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், பல கோடி மக்களுடன் விளையாடும் மக்களை சுட்டுக் கொல்லும் அதிகாரிகள் எப்போதும் தண்டிக்கப்படுவதில்லை. அவர்கள் சட்டத்தின் பிடியில் கூட சிக்குவதில்லை.

இப்போது ஊழல் கரைபடிந்த நபராக தேர்தல் கமிஷனின் தமிழக பொருப்பாளராக இருக்கும் சத்தியபிரதா  சாஹுவுக்கு முன்னால் ராஜேஷ் லக்கானி தேர்தல் அதிகாரியாக இருந்தார். 144 தடை யுத்தரவு போட்டு தேர்தலை நடத்திய பெருமகனார் இவர்.

ஜெயலலிதா சுயநினைவின்றி இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பல்லோவில் அவரது கைவிரல் ரேகையை உருட்டி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்  அதிமுக வேட்பாளர்கள். போட்டியிட்டார்கள். மூவருமே  ஜெயலலிதாவின் போலி கைநாட்டு மூலம் வென்றார்கள்.  வழக்கறிஞர் அருண் வைத்தியலிங்கம் இந்த கைரேகை மோசடியை சட்ட ரீதியாக போராடி நிரூபித்தார். அப்போது நீதிமன்றத்தில் சிக்கியவர் முன்னாள் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. “நம்பிக்கையின் அடிப்படையில் கைரேகையை நம்பி ஏற்றுக் கொண்டொம்” என்றார்.  அரசியல் சாசனத்திற்கு உண்மையாக இல்லாமல் அரசியல் சாசன விதிமுறைகளை குப்பையில் வீசி விட்டு ஒரு கட்சிக்காக வேலை செய்த ராஜேஷ்லக்கானி இதற்காக என்ன ஆதாயம் அடைந்தார்? செய்த தவறு மூன்று தொகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையை ராஜேஷ் லக்கானி கொலை செய்திருக்கிறார். இது தண்டனைக்குரிய குற்றம் இல்லையா? ஆனால் நீதிமன்றம் இவருக்கு எந்த ஒரு தண்டனையும் விதிக்காமல் விடுவிக்கிறது.

இப்போது சத்யபிரதா சாஜு ஏ.சி சண்முகம் வேலூர் தொகுதியில் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது. தேனியில் ஓபிஎஸ் மகன் நூறு கோடி ரூபாய் செலவு செய்கிறார். தூத்துக்குடியில் தமிழிசைக்காக பணம் கோடி கோடியாய் கொட்டப்படுகிறது.  கரூரில்  ஜோதிமணி மீதும் நாஞ்சில் சம்பத் மீதும் கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆயிரக்கணக்கான புகாரை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை பிடித்த திமுகவினர் போலீசிடம் ஒப்படைக்க அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்து திருப்பி அனுப்பும் போலீஸ் பல இடங்களில்  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடரும் அவலம்.

சத்தியபிரதா சாஹு இதெல்லாம் தெரியாமல் செய்ய வில்லை ஆதாயங்களுக்காக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் உள்ளது. இந்த அதிகாரிகள் இழைக்கும் கேடுகளுக்கான தண்டனைகளை இவர்கள் அனுபவிப்பார்களா?

#Satyabrata_Sahoo  #Rajesh_Lakhoni  #Election_Commission

ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம் அதிர்ச்சி!

அமித்ஷா மிரட்டல் –முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அச்சம்!

ஜூலியன் அசாஞ்சேவை வலுக்காட்டாயமாக கைது செய்த லண்டன் போலீஸ்!

ட்டுவழிச்சாலை – வழக்குப் போட்ட விவசாயி அன்புமணி மீது பாய்ச்சல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*