பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி லயோலா கருத்துக்கணிப்பு!

வருமானவரித்துறை ரெய்ட் – சந்திரபாபு நாயுடு போராட்டம்?

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற  தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளடங்கிய நாற்பது தொகுதிகளில் பெருவாரியான இடங்களில் திமுக கூட்டணி வெல்லும் என லயோலாக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

லயோலாக்கல்லூரி மக்கள் பண்பாட்டுத் தொடர்பகம், முன்னாள் மாணவர்கள் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெறப்போகிறவர்கள் யார் என்று கருத்துக்கணிப்பை நடத்தியது.தமிழகத்தைப் பொறுத்தவரை 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம். சிபிஐ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிடுகின்றனர். அது போல பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக, பாமக, தமாக, உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.   அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தனித்து போட்டியிடுகின் றது. இது போல நாம் தமிழர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களத்தில் உள்ளது. 18 தொகுதிகளுக்கு நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றனர்.

சுமார்  21 ஆயிரத்து 464 பேரைச் சந்தித்து லயோலா மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

40 நாடாளுமன்ற  தொகுதிகளில் 27 முதல் 33 தொகுதிகள் வரை திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், அதிமுக மூன்று முதல் ஐந்து தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒன்று முதல் இரண்டு நடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

அது போல இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக  9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக இரண்டு முதல் மூன்று தொகுதிகள் மட்டுமே கைப்பற்றும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் மூன்று முதல் ஐந்து  தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

#கருத்துக்கணிப்பு #2019_நாடாளுமன்றதேர்தல் #திமுகவெற்றி

மிஷன் சக்தி விண்வெளி சோதனை வெற்றிமோடி அறிவிப்பு!

எடப்பாடியின் காவலாளிதான் மோடி- ஸ்டாலின் மாஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*