பொள்ளாச்சி பிரகதி -பாலியல் சித்ரவதை செய்து கொன்ற அத்தை மகன்!

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பாமக திட்டம்?

ஆதிச்சநல்லூர் சந்தேகங்கள் – தமிழ் மகன்

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பாமக திட்டம்?

ஆதிச்சநல்லூர் சந்தேகங்கள் – தமிழ் மகன்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பிரகதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்  அவரது அத்தை மகனை போலீசார் கைது செய்துள்ளார்கள். “தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற கொடூர  எண்ணத்தால் பெண்ணை கொலை செய்துள்ளதாக கொலை வழக்கில் கைதாகியுள்ள நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் ராகவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் பிரகதி வயது 20. கோவை தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படுத்து வந்த  இவருக்கும் ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த நாட்டுதுரை  என்பவரும் விரும்பியதன் மூலம் ஒரே சாதியினர் என்பதாலும் பிரச்சனை ஏதும் இன்றி இரு வீட்டாரும் பேசி திருமணத்திற்கு சம்மதித்து வருகிற ஜூன் 13-ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி விடுதியில் இருந்து வீட்டிற்கு கிளம்பிய பிரகதி வீடு வந்து சேரவில்லை.அவரது போனும் ஸ்விட்ச் ஆப்ஃ ஆகியிருந்தது. இரவு முழுக்க வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஓட்டன் சத்திரம் காவல்நிலையத்திலும்,  கோவை காட்டூர் காவல் நிலையத்திலும் பெண்ணைக் காணவில்லை என புகார் கொடுத்தனர். பிரதியின் பெற்றோர் போலீசிடம் புகார் கொடுக்கச் சென்ற போது பிரகதியின் அத்தனை மகன் சதீஷ்குமார் என்பவரும் உடன் சென்றிருக்கிறார். அவரும் பிரகதியை தேடியிருக்கிறார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காணாமல் போன பிரகதி சனிக்கிழமை மாலை பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி என்னும் இடத்தில் சாலையோர முட்புதரில் சடலமாக காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்படுகிறார். பிரேதப்பரிசோதனைக்குப் பின்னர் உடலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரகதியில் உடலில் இருந்த நகைகள் திருடப்படவில்லை அப்படியே இருந்தன. அவர் உடன் மீது மிக மோசமான காயங்கள் இருந்ததால் மிக கொடூரமாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. பிரகதியின் செல்போன் திருப்பூர், பல்லடம் அருகில் ஆப்ஃ செய்யப்பட்டிருக்கிறது. போலீசார் பிரகதி தொடர்பான பல விஷயங்களை விசாரித்த போது அவருக்கு ஜூனில் திருமணம் ஏற்பாடாகி இருந்தது தெரியவர அதையொட்டி விசாரணையை நடத்தினார்கள். பிரகதியை சில ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை மகன் சதீஷ்குமார் திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்ட போது பிரகதியின் குடும்பம் மறுத்ததால் அத்தை வீட்டிற்கும், பிரகதி வீட்டிற்கும் மன வருத்தம் ஏற்பட்ட தகவலும் தெரியவர சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரித்ததில், பிரகதியை கடத்தி கொலை செய்ததை சதீஷ்குமார் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

பிரகதியை காரில் கடத்தி கொலை செய்த சதீஷ்குமார் தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பிரகதியின் பெற்றோருடன் இணைந்து புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் போனதோடு. அவர்களுடன் சேர்ந்து தானும் பிரகதியை தேடுவது போல நடித்து சிக்கியிருக்கிறார்.

ஒரு பெண்ணைக் கடத்தி கொலை செய்து உடலை புதருக்குள் வீசியது சதீஷ்குமார் ஒருவர் மட்டுமே செய்தாரா அல்லது இதில் ஒரு குழுவாக ஈடுபட்டார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வட இந்திய மாநிலங்களில் நடப்பது போன்ற படுகொலைகள் இப்போது தமிழகத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றன. எங்கெல்லாம் சாதிப் பெருமிதம் ஏற்றப்படுகிறதோ அங்கெல்லாம் பெண் தன் சொத்து, தனக்கு மட்டுமே உரிமையானவள் என்ற எண்ணம் உருவேற்றப்பட்டு. இந்த கொலைகளுக்கு பின்னணியாக இருக்கிறது. இது போன்ற கொலைகளும் கூட ஒரு வகையில் கவுரவக்கொலைகள்தான். இது போன்ற கொலைகளுக்கு பின்னால் உள்ள கருத்தியல்கள் ஆபத்தானவை. சிறு வயது முதலே குழந்தைகளை  வளர்க்கும் போது “அவ உனக்குத்தான்” என்று ஆசை காட்டி வளர்க்கும் மூடப்பழக்கம் இன்னும் கிராமப்புறங்களில் இருக்கிறது. அப்படி ஆசையை அத்தை மகனுக்கு ஊட்டி விட்டதாக சந்தேகங்களும் இதில் உள்ளன. இன்னொரு பக்கம் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படி காதலித்த பெண் கிடைக்காவிட்டால் அவளை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணமும் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் தளத்தில் பரவி வரும் பாசிசக் கருத்தியல்களுக்கு குடும்பம் என்னும் நிறுவனமும் விதி விலக்கு அல்ல என்பதையே பிரகதி படுகொலை எடுத்துக் காட்டுகிறது. ஆணை ஆணாகவும், பெண்ணை பெண்ணாகவும் ஒருவர் ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல் சுதந்திரத்தில் தலையிடாமல் வாழும் நாள் எந்நாள்?

#பிரகதிபடுகொலை #பொள்ளாச்சி_படுகொலை #பிரகதிகொலை #சதீஷ்குமார் கைது

 

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*