மயங்கி விழுந்த மன்சூர் அலிகான் –மருத்துவமனையில் அனுமதி!

நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்ததால் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக திண்டுக்கல் நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடுகிறார்.  வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே திண்டுக்கல் தொகுதிக்குச் சென்ற மன்சூர் அலிகான் தேர்தல் வேலைகளைத் துவங்கினார். மற்ற வேட்பாளர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபடும் மன்சூர் அலிகானுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு காணப்படுகிறது. இன்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்  அழகம்பட்டி, சர்க்கரை நாயக்கனூர், கமலாபுரம் பகுதிகளில் மாலை வாக்குச் சேகரித்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்சியினர் சேர்தனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

#மன்சூர்_அலிகான் #நாம்தமிழர் #சீமான் #திண்டுக்கல்_நாடாளுமன்றதொகுதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*