வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற பாமக திட்டம்?

ஆதிச்சநல்லூர் சந்தேகங்கள் – தமிழ் மகன்

பெருவாரியான இடங்களில் திமுக வெற்றி லயோலா கருத்துக்கணிப்பு!

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி ராமதாஸும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் விஷயங்கள் கடும் சர்ச்சைகளை உருவாக்குவதோடு தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி வேறு கட்சியினரை வாக்களிக்க விடாமல் சதி செய்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால், கடந்த முறை தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்கைப் பெற்ற பாமக தருமபுரி தொகுதியில் வெற்றியும் பெற்றது. ஆனால், அதிமுக கூட்டணியை கடந்த ஏழு ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்த ராமதாஸ் அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளதால் அவர்களின் செல்வாக்கு மண்டலங்களிலேயே கடும் அதிருப்தி காணப்படுகிறது. தருமபுரியில் அனுபுமணி ராமதாஸ் அவர்களுக்கு கடும் போட்டி நிலவும் நிலையில், ஏற்கனவே பூத்தில் நாம் தான் இருப்போம் எனமாற்றுக் கட்சியினரை மிரட்டும் வகையில் அன்புமணி பேசியது தேர்தல் கமிஷனிடம் புகார் ஆகியுள்ள நிலையில், பாமக தலைவர் ராமதாஸோ “ பாமக சிங்கக்குட்டிகள் அன்னைக்குபோய் பூத்தில் போய் நிப்பாங்க… நின்னா என்னாகும்” என்று பேசியுள்ளார். வேறு கட்சியினர் வாக்களிக்க முடியாது என்று பொருள் படும் வகையில் பேசியுள்ள ராமதாஸ் அவர்களின் பேச்சு பல சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது.
பாமக போட்டியிடும் தொகுதிகளில் பூத் கமிட்டி மெம்பர்களோடு பல இளைஞர்களைத் திரட்டி பூத்துகளைக் கைப்பற்றி ஒட்டு மொத்த வாக்கையும் மாம்பழச் சின்னத்திற்கே போட்டுக் கொள்ளலாம் என்ற திட்டம் பாமகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக வன்னியர் சங்கத்தின் மூலம் இளைஞர்களை கிராமங்கள் தோறும் திரட்டும் பணி முடுக்கி விட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட திமுக-காங்கிரஸ்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாமகவின் இந்த திட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் வியூங்கள் வகுத்து வருகிறார்கள். பாமகவின் நடவடிக்கைகளால் வட மாவட்ட தேர்தல் களத்தில் தேர்தல் நாளன்று கடும் பதட்டம் நிலவும் என்று கூறப்படுகிறது.

#பாமக #ராமதாஸ் #2019_நாடாளுமன்றதேர்தல் #அன்புமணிராமதாஸ்

வருமானவரித்துறை ரெய்ட் – சந்திரபாபு நாயுடு போராட்டம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*