இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக-  சாதித்த  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்!

திமுக துவங்கப்பட்ட பின்னர் கலைஞர் இல்லாமல் திமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல்.  தமிழக அரசியல் என்றாலே அது எம்.ஜி.ஆர், கருணாநிதி. அல்லது ஜெயலலிதா கருணாநிதிதான். அந்த வரிசையில்  ஜெயலலிதாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை.  கலைஞர் இருந்த இடத்தில் திமுக தலைவரனார் ஸ்டாலின்.

மைனாரிட்டி அரசொன்றை தங்களின் சொந்த நலனுக்காக பாஜக ஆட்சியும் மோடியும் பாதுகாக்கிறார்கள். என்னென்ன வழிகள் எல்லாம் உண்டோ அத்தனை வழிகளையும் பயன்படுத்தி பாதுகாக்கிறார்கள்.  இப்படியான சூழலில்தான் இரண்டு கோஷங்களை ஸ்டாலின் முன் வைத்தார். ஒன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம். இரண்டாவது பிரதமர் வேட்பாளராக ராகுலை திமுக முன்மொழிகிறது என்றார். இரண்டுமே இந்தியாவுக்கு புதியது.

பாஜகவால் அனைத்து மாநிலங்களுமே பாதிக்கப்பட்டாலும், மோடியை  வீழ்த்துவோம் என்று இந்தியாவின் பெரும்பான்மை தலைவர்கள் கூறினாலும் கூட அவர்களுக்குள்  இந்திய அளவில் பிரதமராக ஒருவரை அடையாளம் கட்ட இயலாமல் போனது. காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணக்கும் பணியில் தோல்வியைச் சந்தித்தது. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு ஈகோ அந்த ஈகோதான் மோடியை பிரமாண்ட வெற்றியின் விளிம்பில்   நிறுத்தியது.

ஸ்டாலின் அதை அரசியல்  நேர்த்தியோடு கையாண்டார். ஈகோவை தூக்கி ஓராமாக வைத்து விட்டு  கூட்டணிக் கட்சிகள் கேட்ட தொகுதிகளைக் கொடுத்தார். வெல்லும் தொகுதிகள் எது என்பதை அமர்ந்து பேசி தொகுதிகளை ஒதுக்கினார். தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பியவர்களையும் அரவணைத்தார்.

திமுக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வென்றிருக்கிறது.  தேனி தொகுதியை தவிற மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இந்திய அளவில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று விட்டதால்.  திமுகவின் இந்த வெற்றி அகில இந்திய அளவில் எந்த மாற்றங்களையும் கொண்டு வராது என்பது யதார்த்தம் .ஆனால், ஸ்டாலின் துணிச்சலாக எதிர்கொண்டு தமிழக மக்களிடம் இருந்து மோடியை அப்புறப்படுத்தியது போல பிற மாநில தலைவர்களால் மோடியை எதிர்கொள்ள முடியவில்லை. அத்தோடு, காங்கிரஸ் கட்சியாலேயே மோடியை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால், இந்த வெற்றி திமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட கட்சியாக  உருவாக்கி உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் திமுகவுக்கு கிடைத்துள்ள உயரிய அங்கீகாரம் இது. ஸ்டாலின் தன் முதல் தலைமைப்பதவி காலத்தில் இதை சாதித்து கலைஞரின் வாரிசு தான் தான் என்பதை நிரூபித்திருக்கிறார். கலைஞர் குடும்பத்தை விட கட்சியை உயிருக்கு உயிராக நேசித்தவர். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் மூன்றாவது  பெரிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட கட்சியாக திமுகவை உயர்த்தியிருக்கும் ஸ்டாலினைப் பார்த்து உச்சி முகர்ந்திருப்பார். 2016 தேர்தலில் தோல்வியடைந்த போது  செயற்குழுவில் உடைந்து அழுத கலைஞரின் ஆன்மாவுக்கு இதம் சேர்த்து விட்டார். ஸ்டாலின் ஆனாலும் அவர் செல்ல வேண்டிய தூரமும் சுமையும் அதிகம்தான் அதையும் கலைஞரின் நிழலில் நின்று செய்து காட்டுவார்.

 

#Dmk_Leader_staline #mk_staline #Muthuvel_karunanidhi #முத்துவேல்கருணாநிதி #திமுக_ஸ்டாலின் #திமுகவெற்றி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*