இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்!

உலகறிந்த மனித உரிமை போராளியும் மணிப்பூர் போராளியுமான இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தின் கொடைக்கானலில் அன்னையர் தினத்தன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.மணிப்பூரில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படைத் தடைச் சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் சர்மிளா தனது போராட்டத்தை முடித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தார். ஆனால், கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் அதில் நீடித்திருக்க முடியாமலும் படு தோல்வியைச் சந்தித்ததாலும் உள்ளூரிலேயே அவருக்கு நெருக்கடிகள் உருவானது. இந்நிலையில், தமிழகத்தின் கொடைக்கானலில் குடியேறிய இரோம் சர்மிளா  கடந்த 2017 ஆண்டு தேஸ்மந்த் கொட்டின் என்பவரை திருமணம் செய்து கொண்டு கொடைக்கானலிலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அன்னையர் தினத்தன்று இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#ஐரோம்_ஷர்மிளா #இரட்டைக்குழந்தைகள் #அன்னையர்தினம் #இரோம்_சர்மிளா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*