ஓபிஎஸ் மகன்  ரவீந்திரநாத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்?

பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்!

ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை!

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து  30-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது பல சந்தேகங்களை உருவாக்கி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சந்தேகத்திற்கிடமான நிலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹு விளக்கம் அளித்த நிலையில், இன்று திருவள்ளூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு திமுக, காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி தனியார் வாகனத்தில் இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழக துணை முதல்வரான பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்  தேனி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் இடையில் கடும் பனிப்போர் நிலவி வரும் நிலையில் பன்னீர்செல்வம் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளார். அதனால் அவருக்கு  தேர்தல் கமிஷன் மையத்தில் தனி செல்வாக்கு உள்ளது. தேனி தொகுதி தேர்தலில் ரவீந்திரநாத் பணத்தை வாரியிறைத்த நிலையில் தேர்தல் கமிஷன் அதை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் மகனுக்காகத்தான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

#தேனி_தேர்தல்  #பன்னீர்மகன் #வாக்குப்பதிவு_இயந்திரங்கள்

இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*