கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்!

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. அதையொட்டி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை மாலை 6-30 மணிக்கு பல தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இந்த கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக 300 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று ஒன்று போலவே தெரிவித்தன. ஆனால், அதே நேரம் தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பலான இடங்களில் வெற்றி பெறும் என்றும் அறிவித்தன. இதை பாஜக தலைவர்கள் ஏற்று கொண்டாடி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினிடம் இது பற்றி கருத்துக் கேட்ட போது  “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதனை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை. மக்களின் கணிப்பு என்ன என்பதை இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துக்கொள்ளலாம். அதை மட்டுமே நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார் மு.க.ஸ்டாலின்.

#எக்சிட்போல் #கருத்துக்கணிப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*