கருத்துக்கணிப்பு மோசடியானது- ஏன்?

கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை –ஸ்டாலின்!

கடந்த நான்கு ஆண்டுகளில் மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட இந்தியா டுடே, நியூஸ் 18, ரிபப்ளிக் டிவி , எப்போதுமே மொடி வெல்வார் என்று கருத்துக்கணிப்பு வெளியிடும் சி வோட்டர்ஸ் போன்றவை இணைந்து தேர்தல் முடிந்த நேற்று மாலை 6.30 மணியளவில் அடுத்தடுத்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. சொல்லி வைத்தது போன்று அனைத்து ஊடகங்களும் பாஜக 300 தொகுதிகள் வரை வெல்லும் எனக் ஆருடம் கூறிய நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர் விஜயசங்கர் எழுதியுள்ள கருத்து முக்கியத்தும பெறுகிறது.

அவர் தன் முகநூல் பக்கத்தில்,

//CNN நியூஸ் 18 எக்சிட் போல் 199 தொகுதிகளில்தான் நடத்தப் பட்டது. ஒரு தொகுதிக்கு 25 வாக்காளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியிலிருந்து வரும் ஒவ்வொரு மூன்றாவது வாக்களரின் கருத்தைக் கேட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கருத்துக் கணிப்பு சாம்பிளை நான் கேள்விப் பட்டதேயில்லை.// எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற  தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தனித் தனியாக நின்ற நிலையில் வாக்குகள் பிரிந்து பாஜக வென்றது. ஆனால் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இணைந்த பின்னர் ஒரு தேர்தலில் கூட பாஜகவால்  வெல்ல முடியவில்லை. ஆனால்,  பாஜக சுமார் 70 தொகுதிகள் வரை உத்தரபிரதேசத்தில் வெல்லும் என்று சொல்வதும் மாயாவதி, அகிலேஷ் யாதவ் படுதோல்வியடைவார்கள் என்று கருத்துக்கணிப்பு வெளியிடுவதும் பலத்த சந்தேகத்தை மக்களிடையே உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக ஆய்வாளர்  வெங்கடேஷ் ஆத்திரேயா வெளியிட்டுள்ள கருத்தில் //கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஊடகங்கள் அனைத்தும் பாஜக கூட்டணி 300 தொகுதிகள் வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பாஜக 170 முதல் தோராயமாக வெல்லும் என்பது கணிப்பு. இந்த பாஜக 140 முதல் 170 தொகுதிகள் வரை வெல்லலாம் என்ற ஊகங்கள் இருந்த போதும் , கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுவது போல உத்தரபிரதேசம், ராஜஸ்தான்,மகாராஷ்டிர மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளிலும் வெல்லும் என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது அது போல கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெல்லும் என்பதும் சந்தேகமாக உள்ளது.//

ஒரு வேளை இப்படி  ஒரு எண்ண ஓட்டத்தை பொதுவெளியில் உருவாக்கி வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் கமிஷன் துணையோடு தில்லு முல்லு பண்ணி வெல்ல பாஜக வெல்கிறதோ என்ற சந்தேகம் பொது வெளியில் உருவாகியிருக்கிறது.

#எக்சிஸ்ட்போல் #பிரதமர்மோடி #Exit_poll #BJP_WIN

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*