பிளவுவாதிகளின் தலைவர் மோடிக்கு டைம்ஸ் இதழ் புகழாரம்!

ஸ்டாலினின் சவாலை ஏற்பாரா தமிழிசை!

இரோம் சர்மிளாவுக்கு இரட்டைக்குழந்தைகள்!

உலகபுகழ் பெற்ற டைம்ஸ் இதழால் மோடி உலகின் சிறந்த தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்று பாஜகவினர் கடந்த சில வருடங்களாக தகவல் பரப்பி வந்த நிலையில், இப்போது டைம்ஸ் இதழின் ஆசியபதிப்பு பிளவுவாதிகளின் தலைவர் என்று மோடியைக் குறிப்பிட்டு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.பிளவுவாதி அல்லது மோடி ஒரு பிரிவினைவாதிகளின் தலைவர் என டைம்ஸ் (Divider in chief) விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதே இதழ் மோடி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட 2014-ஆம் ஆண்டு  ‘Modi means buisness’ என்று கவர் ஸ்டோரி வெளியிட்டது.

நாடு முழுக்க மாட்டுக்கறி உணவு, மதம், பண்பாடு சார்ந்து சிறுபான்மையினர், தலித்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், பண்பாட்டு ரீதியாக  கொட்டப்படும் வெறுப்பு கருத்துக்கள், வெறியூட்டும்  பேச்சுக்கள் என  இவைகள் அனைத்தும் எப்படி மோடியால் பாதுகாக்கப்படுகிறது. மோடி பிரதமரான பின்னர் இந்த எண்ணம் இந்திய அரசியல் களத்தில் எப்படி மேலோங்கியது என்பது பற்றி பக்கம் பக்கமாக எழுதியுள்ளது டைம்ஸ் இதழ்.இந்தியாவின் ஆதாரக் கொள்கையான  மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை எப்படி மோடியின் ஆட்சியில் சிதைக்கப்பட்டது என்பதும் இந்த கவர்ஸ்டோரில் முக்கிய பதிவாக உள்ளது.

#டைம்ஸ்_இதழ் #Modi_Times #Modi_in_Times

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*