பொன்னாரை தோற்கடித்த பாலத்தின் கீழ் வாழும் மக்கள்!

பொன்னார் என்ன செய்தார்?

”பாலம் கட்டினார்”

சரி  வேறென்ன செய்தார்?

பாலம் கட்டினார்

பாலம் கட்டினார்

பாலம் கட்டினார்

ஒரு பாலம் மார்த்தாண்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொன்னார் கட்டினார். ஆசியாவில் இரண்டாவது நீளமான பாலம் அது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் என நினைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பாலம் கட்டுமானப்பணியால் மக்கள், வணிகர்கள் அடைந்த துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. நிற்க, இப்போது  தேர்தலுக்கு முன்னர் திறக்கப்பட்ட அந்த பாலத்தின் கீழ் இருமுறை பயணித்தேன். இரும்பு  பட்டிகளை வரிசையாக  அடுக்கி போல்ட் போட்டு முறுக்கியிருக்கிறார்கள். இதற்காக ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். இந்த பாலம் தன்னை வெற்றி பெற வைக்கும் என பொன்னார் நம்பினார். பொன்னார் ஆதரவாளர்களும் தாமரைக்கு இணையாக பாலத்தை வைத்தே குமரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பை அலசினார்கள்.

தனித்து போட்டியிட்டு எப்போதும் பாஜக   நாகர்கோவில் தொகுதியில் வென்றதாக சரித்திரம் இல்லை என்ற போதும், பாலம்  வெற்றியைக் கொடுக்கும் என பஷீர்  கதைகளில் வரும் நாயகர்கள் போல பேசி வந்தார்கள். கடைசியில் பாலத்தில் கீழ் வசித்த மக்கள் எல்லாம்  ஒன்று சேர்ந்ந்து பொன்னாருக்கு எதிராக வாக்களித்து அவரை தோற்கடித்திருக்கிறார்கள்.

பாலம் போட்டோம்,  ரோடு போட்டோம் என்றெல்லாம் மக்களிடம் வாக்குக் கேட்கும் காலம் முடிந்து விட்டது. வளர்ச்சித்திட்டங்கள் என்றாலோ, பாலம் என்றாலோ, சாலை என்றாலோ மக்கள் பதறுகிறார்கள். இதை தமிழகம் முழுக்க கடந்த நான்கு மாதங்களாக சுற்றிய நான் நேரடியாக மக்களிடம் இருந்து அறிந்து கொண்ட உண்மை.

காரணம் நிலம் பறி போவதுதான் வளர்ச்சித்திட்டம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி விட்டது.  45,000 வாக்குகளை அழித்தொழித்தும் பொன்னாரை பாலத்தின் கீழ் வாழும் மக்கள் தோற்கடித்தார்கள் என்பதை எழுதி வையுங்கள்.

#பொன்னார் #நாகர்கோவில்_நாடாளுமன்றதொகுதி #பொன்_ராதாகிருஷ்ணன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*