ஒரே நாடு ஒரே தேர்தல் புறக்கணித்தது திமுக அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது அதிமுக!

பிரதமர் மோடி தலைமையில்  நாடு முழுக்க நாடாளுமன்ற சட்டமன்றங்களுக்கும் ஒரே தேர்தலாக நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தை திமுக புறக்கணித்தது. அதிமுக சார்பில் அனுப்பப்பட்ட சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தை கூட்டத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது பாஜக.

தேர்தல் செலவினங்களை கருத்தில் கொண்டு நாடு முழுக்க ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்று பாஜக விரும்பியது. இது அரசியல் சட்டத்திற்கே முரணானது என்பதுடன். பிராந்தியக்  கட்சிகளை அழித்தொழிக்கும் முயற்சி என்றும்,  தேர்தல் கமிஷன் ஈவிஎம் மெஷின்  மோசடிகள் அதிக அளவு நடந்துள்ளதாகக் கூறி தேர்தல் கமிஷனின் நடவடிக்கையே வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு சந்தேகத்திற்கிடமாகி உள்ள நிலையில், நாடு முழுக்க ஒரே தேர்தல் என்பதே நம்பத்தகுந்ததாக இல்லை. இது பாஜகவுக்கு ஆதரவாக முடியும். என்று எதிர்க்கட்சிகள் பலதும் கருத்துக்களை  தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில்  டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமூல்காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.இந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி , மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தை டெல்லி அனுப்பியது. ஆனால், கட்சியின் தலைவர்கள்தான் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. டெல்லி சென்ற அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்னை வருகிறார்.பாஜகவின் இந்த செயல் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரே தேர்தல் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி “நாட்டின் பன்மைத்துவத்தை அடியோடு குலைத்து விடும் . ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்” என்றார்.

 

#ஒருநாடு_ஒரு_தேர்தல் #ஒரேநாடு_ஒரேதேர்தல் #one_nation_one_elaction

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*