கடனில் மூழ்கினார் கேப்டன்  விஜயகாந்த் – வீடு  சொத்துக்கள்  ஜப்தி?

தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்போடு உருவாகி வளர்ந்து வந்த  நடிகரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் சொத்துக்களை பொது ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

1978-ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த விஜயகாந்த் 2006-ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை துவங்கி அந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றதோடு விருத்தாசலம் தொகுதியில் வென்றாஅர். அடுத்தடுத்து கணிசமான வாக்கு வங்கியை தேமுதிக உருவாக்கிக் கொண்டதால் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மோதலால்  அந்த கூட்டணி முறிவுக்கு வந்தது. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலுமே படு தோல்வியைச் சந்தித்த தேமுதிக தன் வாக்கு வங்கியையும் இழந்தது. இப்போது உடல் நலம் குன்றி வாய் பேச முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த் பொது வெளிக்கு வருவதில்லை.

இந்நிலையில்தான் அவர் வங்கியில் வாங்கிய ஐந்து கோடி ரூபாய் கடனுக்காக அவரது ஆண்டாள் அழகர் கல்லூரி சொத்த்துக்கள் மற்றும் அவர் சாலி கிராமத்தில் வசிக்கும் வீட்டையும் பொது ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. நடிகர் விஜயகாந்திற்கு இது சின்ன தொகைதான் என்ற போதும் இந்த தொகைக்கான வட்டியை அவரது குடும்பத்தினர் செலுத்தாமல் விட்டிருப்பதால் இந்த பொது ஏல அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#விஜயகாந்த் #விஜயகாந்த்_வீடு_ஏலம் #கடனில்_விஜயகாந்த்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*