#தமிழ்வாழ்க  கலகம் செய்த தமிழக எம்.பிக்கள்- இந்தியா திரும்பிப் பார்க்கிறது!

தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இது பாஜக  எம்.பிக்களை கடுப்பேற்ற அவர்கள் பாரத் மாதா கீ ஜே என்று கோஷம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் என்று பதவியேற்ற போது பாஜக எம்பிக்கள் மேஜையை தட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரிவேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்று பதவியேற்றுக் கொண்டார். தூத்துக்குடி எம்.பியும் திமுக உறுப்பினருமான கனிமொழி தமிழ்  வாழ்க, பெரியார் வாழ்க என்று பதவியேற்ற போது, பாஜக எம்பிக்கள் ஜெய் ஸ்ரீராம், என்று பதில் கோஷமிட்டனர்.

தருமபுரி எம்.பி செந்தில்குமார் திராவிட நாடு வாழ்க, தமிழ் வாழ்க என்று பதவியேற்றார்.  தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்பேன் – தமிழக எம்.பி கணேசமூர்த்தி பதவி பிரமாணத்தில் முழக்கமிட்டார்.

அது போல தயாநிதிமாறன் தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார்  வாழ்க என்று பதவியேற்றார். தமிழக எம்.பிக்கள் தமிழ் வாழ்க என்று சொன்ன போது பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து #தமிழ்வாழ்க என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

வட  இந்திய எம்பிக்களின் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து பலரும் அதில் கருத்துக்களை பதிந்து வருகிறார்கள்.

#தமிழ்வாழ்க #திராவிடம் #திமுக_உறுப்பினர்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*