#NEET எதிர்ப்பிரச்சாரம் தேவை!

நீட் என்னும் அநீதியான தேர்வு முறையில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருவதாகவும், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாகவும், பாஜக, அதிமுகவினர் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நீட் தேர்விலிருந்து விலக்கு என்ற நியாயமான கோரிக்கையில் இருந்து தடம் மாறும் வகையில் இந்த பிரச்சாரம் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு மூன்று பேரின் உயிரை பலி கொண்ட நீட் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இதுவரை 7 பேரின் உயிரை பலி கொண்டிருக்கிறது.  இப்போது   வெளிவந்துள்ள முடிவுகளின் படி பெரும்பாலானவர்கள் பெரும் கோடீஸ்வர உயர்சாதியினர் வீட்டு பிள்ளைகளாகவும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுமே நீட் தேர்வில் தெரிவிவாகி இருக்கிறார்கள். ஒரு அரசுப்பள்ளி மாணவர்கள் கூட நீட் தேர்வில் தெரிவாக வில்லை. இவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது என்று ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். அந்த பொய் எப்படி வடிகட்டிய பொய் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. இந்த ஆண்டு  தெரிவான மாணவர்களில் பெரும்பாலனவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு படித்தவர்கள். இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வுக்கு படித்தவர்களில் பெரும்பாலனவர்கள் நீட் தேர்வில் தெரிவாக இல்லை. இப்படி தெரிவாகாமல் போனவர்கள் அடுத்த ஆண்டும் நீட் படித்து மீண்டும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற கனவில் மீண்டும் படிக்கிறார்கள்.  நீட்  தேர்வு என்பது மோசடியான ஒரு தேர்வு முறை என்பது இவர்களுக்கு தெரியவில்லை.

நான் இந்த ஆண்டு துவக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செஞ்சி பிரதீபா வீட்டிற்குச் சென்றேன். பரிதாபமாக அந்த ஏழை கூலிகளின் குடும்பம் சிதைந்து விட்டது. பத்தாம் வகுப்பில் 444 மதிப்பெண் பெற்ற பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125  மதிப்பெண் பெற்று கல்வி மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அதே ஆண்டு நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வு எழுத எந்த பயிற்சிகளும் பிரதீபா எடுத்துக் கொள்ளவில்லை. 155 மதிப்பெண் பெற்று  நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காது. தனியார் மருத்துவக்கல்லூரியில் பெரும் பணம் கட்டித்தான் மருத்துவம் படிக்க முடியும் என்னும் சூழலில் அடுத்த ஆண்டு நீட் எழுதலாம் என்று முறையாக நீட் தேர்வுக்காக படித்தார். அப்படி படித்து நீட் தேர்வு எழுதிய பிரதீபா வெறும் 39 மதிப்பெண் பெற்று தேர்வெழுதினார். இரண்டாவது முறையாக எழுதிய தேர்வில் ஏகப்பட்ட மொழியாக்கப் பிழைகள் அதை சுட்டிக்காட்டி அதிகாரிக்கு கடிதமும் எழுதினார். பதிலேதும் இல்லாத நிலையில் தேர்வு முடிவு வெளியான நாளில்  தான் தோல்வியடைந்த மனநிலையில்    நீட் தேர்வு உருவாக்கிய மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வில் எழுதினால் வெற்றி என்று நம்புவதும்.  முதல் முறை வாங்கிய மதிப்பெண்ணை விட இரண்டாம் முறை அதிக மதிப்பெண் பெற்று விடலாம் என்று நம்புவதும் முட்டாள் தனம். நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட அனைத்து மாணவிகளுமே படிப்பில் முதல் தர மாணவிகள்.ஆனால், நீட் தேர்வில் முதல் தர மதிப்பெண் பெற வெளிநாடு வாழ் இந்தியர்களாகவோ, பெரும் கோடீஸ்வரர்களாகவோதான் இருக்க வேண்டும் என்பதுதான் சூழல்!

#NEET #ANITHA_MURDER #அனிதாமரணம் #நீட்தற்கொலைகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*